ஹோட்டலில் கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவன்... செருப்பால் விளாசிய மனைவி!
சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், திருமணத்திற்குப் புறம்பான உறவு காரணமாக ஒரு குடும்பம் வீதிக்கு வந்து சண்டையிட்டுக் கொண்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. நபர் ஒருவர் தனது காதலியுடன் ஹோட்டல் அறையில் தனிமையில் இருந்தபோது, அவரது மனைவி அங்கு அதிரடியாக நுழைந்து இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.

தன் கணவன் மற்றொரு பெண்ணுடன் இருப்பதை நேரில் கண்ட மனைவி ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். அங்கேயே சண்டையிடத் தொடங்கிய அவர், தனது கணவனை ஹோட்டல் அறைக்கு வெளியே தரதரவென இழுத்துச் சென்றார். அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில், தனது காலணியைக் கழற்றி கணவனைச் சரமாரியாகத் தாக்கினார். கணவனும் அவரது காதலியும் செய்வதறியாது திகைத்து நின்ற அந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களின் செல்போனில் வீடியோவாகப் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் எப்போது, எந்த ஊரில் நடந்தது என்பது குறித்த துல்லியமான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், @desHi__chora என்ற பெயருடைய எக்ஸ் (X) தளப் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. "திருமண உறவில் நேர்மை இல்லாததே இதுபோன்ற மோதல்களுக்குக் காரணம்" என நெட்டிசன்கள் இந்த வீடியோவின் கீழ் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
