சொட்ட , சொட்ட ரத்தக்கறை, மனைவியின் தலையுடன் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த கணவன்.... பெரும் அதிர்ச்சி!

 
மனைவியின் தலை

இந்தியாவின் வடமாநிலங்களில் குற்றவியல் சம்பவங்கள் , குடும்ப வன்முறைக்ள்நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  மேற்கு வங்காளத்தின் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில்  நடைபெற்ற ஒரு குடும்ப சண்டையில்  கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  காதலர் தினமான 14ம் தேதி 40 வயது நிரம்பிய நபர் ஒருவர், ஒரு கையில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை, மற்றொரு கையில் கத்தியுடன் பேருந்து நிறுத்தத்தில் சுற்றித் திரிந்தார்.

மனைவியின் தலை

யாரும் அவர் அருகே செல்ல முடியாதபடி   கத்தி கூச்சலிட்டபடி இருந்தார். பேருந்திற்காக வந்திருந்த  பயணிகள் பீதியடைந்தனர். இந்த பயங்கர காட்சியை சிலர் தங்களின் செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில்  பதிவிட்டுள்ளனர்.  

மனைவியின் தலை


இது குறித்து   தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.  அவர் பெயர் கவுதம் குச்சைத் . 40 வயதான இவர்  குடும்ப பிரச்சினையில் மனைவியை கொலை செய்து, தலையை வெட்டி பேருந்து நிலையத்திற்கு எடுத்து வந்தது தெரியவந்தது.  
கவுதம் குச்சைத் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.   3 ஆண்டுகளுக்கு முன்பு, கொல்கத்தாவில் உள்ள அலிபூர் உயிரியல்பூங்காவிற்கு குச்சைத் சென்றபோது, சிங்கம் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏறி குதித்து படுகாயம் அடைந்தவர் தான் இவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்