சொத்தில் பங்கு தராத கணவன்.. ஆத்திரத்தில் அடியாட்களுடன் சென்று கொடூரமாக தாக்கிய மனைவி!

 
 இந்துமதி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி ரயில்வே கேட் பழனிச்சாமி நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் இவருக்கும் மனைவி இந்துமதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கணவர் தன்னை துன்புறுத்துவதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் பல்வேறு புகார்களை அளித்துள்ளார்.

இந்நிலையில், அவரது மனைவி அடியாட்களுடன் கணவர் வீட்டுக்கு வந்து கட்டையால் தாக்கியுள்ளார். பின்னர் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த காரைக்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், தனக்கு சொந்தமான சொத்தில் பங்கு கேட்டு வெகுநாளாக தொந்தரவு செய்து வந்ததாகவும், பழனிச்சாமி தீர்மானமாக மறுக்கவே, அவரது மனைவி அடியாட்களுடன் சென்று உருட்டுக் கட்டையால் தாக்கியதும் தெரிய வந்தது. இந்நிலையில், தலைமறைவான இந்துமதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web