விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்.. கர்ப்பிணி மனைவியை 10 முறை துப்பாக்கியால் சுட்ட கொடூர கணவன்..!!

 
மீரா ஆபிரகாம்

கர்ப்பிணியை 10 முறை துப்பாக்கியால் சுட்ட கொடூர கணவன் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூரை சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32). இவரது கணவர் அமல் ரெஜி. இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வந்தனர். கணவன்-மனைவி இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் அமெரிக்கா வந்திருக்கின்றனர். அவர்களது 3 வயது மகன் டேவிட் கோட்டயத்தில் தனது தாத்தா-பாட்டி பராமரிப்பில் வளர்ந்திருக்கிறான். அவனை கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு மிரா அழைத்துச் சென்றார்.

கர்ப்பிணி மனைவியை சரமாரி துப்பாக்கியால் சுட்ட கேரள வாலிபர்- வயிற்றில் இருந்த குழந்தை இறந்தது

இந்நிலையில் மிரா மீண்டும் கர்ப்பமானார். கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர், தனது சகோதரியுடன் செவிலியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு மீரா தனது கணவர் அமலுடன் காரில் சென்றார். அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. கணவன்-மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அமல் ரெஜி, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி மீராவை துப்பாக்கியால் சுட்டார். சுமார் 10-க்கும் மேற்பட்ட முறை  சுட்டிருக்கிறார்.

இதில் படுகாயமடைந்த மீரா காருக்குள் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். ஆத்திரத்தில் தனது மனைவியை துப்பாக்கியால் கூட்ட அமல் ரெஜி, சிறிது தூரம் சென்றதும் அங்கிருந்த தேவாலய பார்க்கிங் பகுதியில் தனது காரை நிறுத்தினார். பின்பு அங்கிருந்தவர்களிடம் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக கூறிய அவர், அதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மீராவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Kottayam: Kerala man held in US for shooting at pregnant wife | Kochi News  - Times of India

மனைவியை துப்பாக்கியால் சுட்ட அமல்ரெஜியை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கியால் சுடப் பட்டதில் படுகாயமடைந்த மீராவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டது. அமல் மீது கொலை முயற்சி மற்றும் பிறக்காத குழந்தையை வேண்டு மேன்றெ கொன்றதாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் படுகாயமைடைந்த மீரா கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

From around the web