மனைவி பிறந்தநாள் பரிசு தராததால் கணவன் தூக்கிட்டுத் தற்கொலை... பெரும் சோகம் !

 
புதுக்கோட்டை புதுக்கோட்டை

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம் வாலிபர் ஒருவருக்கு அண்மையில் திருமணம் முடிந்து, அவர் தனது மனைவியுடன் அதே பகுதியில் மகிழ்ச்சியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த வாலிபருக்குப் பிறந்தநாள் வந்ததையொட்டி, தனக்கு விசேஷமான பிறந்தநாள் பரிசு ஒன்று வாங்கித் தருமாறு அவர் தனது மனைவியிடம் ஆசையோடு கேட்டுள்ளார். ஆனால் அவரது மனைவியோ   கையில் போதிய பணவசதி இல்லை என்று கூறி, கணவனுக்குப் பிறந்தநாள் பரிசு வாங்கித் தரக் கடுமையான முறையில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ்

ஆசையாகக் கேட்ட பிறந்தநாள் பரிசைத் தனது சொந்த மனைவியே வாங்கித் தர மறுத்ததால்  அந்த இளைஞர்   மன வேதனைக்கும் விரக்திக்கும் ஆளாகியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வீட்டில் கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டுப் பின்னர் அது பெரிய அளவிலான குடும்பச் சண்டையாக மாறியுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக மனமுடைந்த அந்த வாலிபர், நேற்று இரவு தனது மனைவி சமையல் அறைக்குச் சென்ற நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களின் படுக்கையறைக்குள் சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் கணவன் அறைக்கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்த மனைவி, அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துப் பார்த்தபோது வாலிபர் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அலறியடித்தார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த பெரம்பூர் காவல்துறையினர்,  இளைஞரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாதாரணப் பிறந்தநாள் பரிசு தராத காரணத்திற்காக  அவர்  தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட இந்த விபரீத சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.