என் கணவரை நீ கொல்... இல்லா விட்டால் நான் ... மனைவி கள்ளக்காதலனுடன் சாட்டிங்... கதறும் கணவன்!

 
மனைவி

தோர்னக்கல் மண்டலம், சில்கோடு பகுதியைச் சேர்ந்த ஜி. ராஜேஸ்வர ராவ், தோர்னக்கல் காவல்துறையிடம் அதிர்ச்சி தரும்  புகார் ஒன்றை  அளித்தார். அதனையடுத்து, காவல்துறையினர் பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து, பின்னர் அந்த வழக்கை கம்மம் கிராமப்புற காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

 அந்தப் புகாரில் தனது மனைவி பவானியும், அவரது காதலன் எனக் கூறப்படும் சைதுலுவும் தன்னைக் கொல்ல சதி செய்வதாக ராவ் குற்றம் சாட்டினார். தனது உயிருக்கும், தனது இரண்டு மகள்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, அவர்களின் உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் பிற ஆவணங்களை அவர் சமர்ப்பித்தார்.

 அவர் சூர்யபேட் மாவட்டம், மட்டம்பள்ளி மண்டலம், ராகவபுரத்தைச் சேர்ந்த பவானியை 2016-ல் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர் கம்மத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். கடந்த சில மாதங்களாகத் தனது மனைவியின் நடத்தையில் மாற்றத்தைக் கவனித்ததாக கூறியுள்ளார். கம்மத்தில் கூரியர் டெலிவரி ஏஜென்டாகப் பணிபுரியும் சைதுலுவுடன் பவானிக்கு அறிமுகம் ஏற்பட்டதாகவும், பின்னர் அவர்களது உறவு கள்ளக்காதலாக மாறியதாகவும்   குற்றம் சாட்டினார். மேலும், தான் இல்லாத நேரத்தில் சைதுலு தங்களது வீட்டிற்கு வந்து சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

அவரது மொபைல் சாட்டிங்கை பார்த்த போது இந்த விபரீதத்தை உணர்ந்ததாகவும், தனக்கும் தனது 2 மகள்களின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.