ஆசை ஆசையா வாங்கிய சாக்லேட்.. பிரித்து பார்த்தால் நெளிந்த புழு.. ஷாக் ஆன வாடிக்கையாளர்..!

 
 சாக்லேட்டில் புழு

பிப்ரவரி 9 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் இருந்து வாங்கிய காட்பரி சாக்லேட் பாரில் புழு ஊர்ந்து செல்வதை ஒருவர் கண்டார். இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த ராபின் சாக்கஸ் என்ற நபர், புழுக்கள் நிறைந்த சாக்லேட் பாரின் வீடியோவை பில் உடன் வெளியிட்டார்.


அமீர்பேட்டை மெட்ரோ நிலையத்தில் அமைந்துள்ள ரத்னதீப் ரீடெய்ல் என்ற கடையில் இருந்து வாங்கியதாக குறிப்பிட்டார். ஆன்லைனில் வெளியிடப்பட்டதிலிருந்து, இந்த சம்பவம் சமூக ஊடக பயனர்களிடையே காட்பரி தயாரிப்புகளுக்கான தர சோதனை குறித்த கேள்விகளை கோபத்துடன் எழுப்பினர்.

Robin Zaccheus Cadbury

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. பல பயனர்கள் தங்கள் கவலைகளை சமூக வலைத்தளட் கருத்துகள் பிரிவில் தெரிவித்தனர். இணையத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவு அந்த கடை மீது அதிகாரிகள்  கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!