ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் சாலையில் அடுத்தடுத்து மோதிய 6 கார்கள்! பரபரப்பு வீடியோ!

 
kaar

 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள PVNR எக்ஸ்பிரஸ் சாலையில், அடுத்தடுத்து 6 கார்கள் மோதிக்கொண்ட சங்கிலித் தொடர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மின்கம்பத்தில் மோதிய கார்

நேற்று (அக். 15) இரவு, ஆரம்கர் நோக்கிச் செல்லும் வழியில் PVNR எக்ஸ்பிரஸ் சாலையின் தூண் எண் 131 அருகே கார் ஒன்று மின்கம்பத்தில் மோதியது. இதைத் தொடர்ந்து பின்னால் வந்த மேலும் 5 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின.

போக்குவரத்து சீரமைப்பு

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து, போக்குவரத்து மீண்டும் சீராக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்காவது காயம் ஏற்பட்டதா என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.