கால் டாக்சி ஏறிய இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி! இழுத்து அணைத்து முத்தமிட்டதாக புகார்.. பாதுகாப்பு ஊழியர் கைது

 
taxi

 

ஐதராபாத் கச்சிபவுலி பகுதியில் கால் டாக்சியில் ஏற முயன்ற பெண்ணை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் இழுத்து முத்தமிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கச்சிபவுலி, இந்திரா நகர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று பணி முடித்த அவர் கால் டாக்சியை வரவழைத்து அதில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அந்தப் பெண்ணை பிடித்து இழுத்துச் சென்று கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.

அவரது சத்தத்தைக் கேட்டு அங்கிருந்தவர்கள் கவனிக்கத் தொடங்கியதும் ராஜ்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து அந்தப் பெண் கச்சிபவுலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

taxi

CCTV காட்சிகளின் அடிப்படையில் ராஜ்குமாரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த சம்பவத்தில் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பெண்ணை தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தை பயன்படுத்துதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.