மைக்ரோ விண்வெளி கேமரா - ஹைதராபாத் ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு இந்தியக் காப்புரிமை!
Oct 8, 2026, 17:50 IST
விண்வெளித் தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்லாக, உலகின் மிகச் சிறிய தொலைநோக்கி கேமராவான 'மீரா' தொழில்நுட்பத்திற்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்தியக் காப்புரிமை பெற்றுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஈஆன் ஸ்பேஸ் லேப்ஸ்’ நிறுவனம் உள்நாட்டிலேயே இந்த அதிநவீன மைக்ரோ விண்வெளி கேமராவை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
வெறும் 502 கிராம் மட்டுமே எடைகொண்ட இந்தச் சிறிய தொலைநோக்கி கேமரா, ஃபியூஸ்டு சிலிக்கா படிகத்தால் செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மூலம் இந்தியாவின் 'MOI-1A' செயற்கைக்கோளில் இந்தக் கருவி விண்வெளிக்குச் செலுத்தப்படுகிறது. பாதுகாப்புத் துறைகள், நவீன விவசாயம் மற்றும் புவி கண்காணிப்பு தொடர்பான பணிகளில் இந்தக் கேமரா மிக முக்கியப் பங்காற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
