பகீர் காட்சிகள்... நிலச்சரிவில் அடியோடு சரியும் நீர்மின்நிலையம்!
இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை சுற்றிப்பார்க்க மக்கள் கூடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான மலைப்பகுதியில் உள்ள சிக்கிமில் நிலச்சரிவு அபாயம் அதிகமாகும்.அடிக்கடி நிலச்சரிவும் ஏற்படும். இங்கு ஆபத்து அதிகம் உள்ள பகுதிகளும் சுற்றுலாத் தலங்களில் உள்ளன. மிகப்பெரிய அளவில் மழை பெய்யும் பகுதிகள் இருப்பதால் பெரிய அணைகள் மற்றும் நீர் மின் நிலைய திட்டங்கள் செயல்படுத்தபட்டுள்ளன.
A massive landslide hit the NHPC Teesta Stage V Power House in Sikkim.#ViralVideo #Viral #Landslide #Sikkim #PowerCorridors pic.twitter.com/6S1l7llDQG
— POWER CORRIDORS (@power_corridors) August 20, 2024
அப்படித்தான் சிக்கிம் மாநிலத்தில் தேசிய நீர்மின் கழகத்தின் டீஸ்டா ஸ்டேஜ் 5 அணையில் நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 510 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் டீஸ்டா ஸ்டேஜ் அணை நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்படுவது உண்டு.
இதனால் ஒரு கட்டத்தில் அபாயகரமான நிலை ஏற்ட்டதால் நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் இந்த பயங்கர நிலச்சரிவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோவில் ஒரே நொடியில் நீர் மின்நிலையம் நிலச்சரிவில் காணாமல் போனது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் இதே டீஸ்டா அணையின் சில பகுதிகள் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு அணை செயலிழந்து விட்டது. அதன் காரணமாக இப்போது ஏற்பட்ட நிலச்சரிவால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. அதேநேரம் அதிகாரிகள் தற்போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்திருந்தனர்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
