இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் பேருந்து அறிமுகம்!!

 
இந்தியாவில் முதல்  ஹைட்ரஜன்  பேருந்து அறிமுகம்!!

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு மாற்றாக தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் வைரலாகி வருகின்றன.இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து, ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் முதல்  ஹைட்ரஜன்  பேருந்து அறிமுகம்!!

இந்த பேருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கு முன் முன்னர், பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து போக்குவரத்து செயல்பாட்டில் பேருந்து புரட்சியை ஏற்படுத்தலாம் . இதனுள் செயல்பட்டு வரும் இன்ஜினால் சுற்றுப்புறத்திற்கு பாதிப்பில்லை.


ஒரே நேரத்தில் இந்த பேருந்தில் 30 பயணிகள் வரை அமர்ந்து பயணம் செய்ய முடியும். வழக்கமான பேருந்துகள் 20% அளவிற்கு வேதியியல் சக்தியில் செயல்படும். ஆனால் ஸ்டார்பஸ் பேருந்துகளில் 40-60% அளவிற்கு வேதியியல் சக்தி ஆற்றலாக மாற்றப்படும். இதனால் எரிபொருள் பயன்பாடு 50% அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது.

இந்தியாவில் முதல்  ஹைட்ரஜன்  பேருந்து அறிமுகம்!!


மேலும் இந்த வகையான பேருந்துகள் , நச்சுப்புகை, கழிவுகளை வெளியிடுவதில்லை. புறநகர் போக்குவரத்திற்கு சிறந்த வாகனமாக திகழும் இந்த வகையான பேருந்துகள் தயாரிப்பில் இஸ்ரோவும் கூட்டு சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web