ஹைலோ ஓபன் இறுதிப்போட்டியில் இந்திய நட்சத்திரங்கள்! பி.வி.சிந்து, லக்சயா சென் முன்னேற்றம்
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு இரட்டை மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஆடவர் பிரிவில் லக்சயா சென் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், சகநாட்டு வீராங்கனையான அன்மோல் கர்ப்பை பி.வி.சிந்து எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், பிரான்ஸ் வீரர் தோமா ஜூனியர் பபோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-17, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரு ஒற்றையர் பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் இறுதிப்போட்டியில் களமிறங்க உள்ளனர். இருவரின் வெற்றியும் இந்திய ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
