ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய சிந்து, லக்ஷ்யா சென்!

 
பிவி சிந்து

 

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் லக்ஷ்யா சென் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முன்காலிறுதி ஆட்டத்தில், 2-ம் நிலை வீராங்கனையான சிந்து பிரான்ஸ் நாட்டின் ரோசி ஒக்டாவியா பன்கசாரியை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 26 நிமிடங்களில் முடிவடைந்தது. அடுத்த சுற்றில் டென்மார்க்கின் அமாலி ஷூல்ஸை சந்திக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர்கள் லக்ஷ்யா சென், கிரண் ஜார்ஜ் மோதினர். 54 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் லக்ஷ்யா சென் 21-15, 18-21, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். அடுத்ததாக பின்லாந்தின் காலே கொல்ஜோனனை எதிர்கொள்கிறார்.

Hylo Open 2026 badminton: PV Sindhu, Lakshya Sen advance to second round with contrasting wins | Zee News English

மேலும், இந்தியாவின் அன்மோல் கர்ப் டென்மார்க்கின் லைன் கிறிஸ்டோபர்சனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். உன்னதி ஹூடாவும் வெற்றி பெற்றதால், இருவரும் காலிறுதியில் நேருக்கு நேர் மோத உள்ளனர். இதனால் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகியுள்ளது.