’நான் சிபிசிஐடி ஆஃபிசர்’.. வாகன சோதனையில் ஈடுபட்ட மர்ம ஆசாமி.. கையும் களவுமாக பிடித்த போலீசார்!
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே குச்சனூர் சாலையில் அந்த வழியாக சென்ற வாகனங்களை கையில் வாக்கி டாக்கியுடன் ஒருவர் நிறுத்தி வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது ஆட்டோவை நிறுத்தியவர் தேனி சிபிசிஐடி போலீசார் என கூறி வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
மேலும் ஆட்டோவில் ஆவணங்கள் சரியாக உள்ளதா எனக் கேட்டு ஆவணங்களைக் கொண்டு வரச் சொன்னார். ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தனுஷ் கொடுத்த தகவலின் பேரில் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாகன தணிக்கை நடத்திய அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர் போலி சிபிசிஐடி போலீஸ் என்பதும், தேனி அருகே அல்லிநகரம் பகுதியை சேர்ந்த வீனஸ் கண்ணன் (50) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் இதுபோன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி சோதனையில் ஈடுபட்டாரா? அவருக்கு எப்படி வாக்கிடகாக்கி கிடைத்தது? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!