நான் விசிக தலைவர்.. என்கிட்டையே டிக்கெட் கேக்குறியா?.. போதை ஆசாமிகள் அத்துமீறல்!

 
வேலூர்

வேலூர் மாவட்டம் மாதனூர், ஆம்பூர் ஆகிய இடங்களில் பெங்களூரு நோக்கிச் சென்ற தமிழக அரசுப் பேருந்தில் 2 பேர் பயணம் செய்தனர். அவர்களிடம் டிக்கெட் வாங்க பஸ் கண்டக்டர் வந்துள்ளார். அப்போது அவர்களிடம் டிக்கெட் எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


அப்போது பஸ் கண்டக்டரிடம் புல் போதையில் தள்ளாடிய 2 பேர், ‘‘உன்னைப் போன்ற கண்டக்டர் 1000 பேரை பார்த்திருக்கிறேன்.. நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர்.. புரிகிறதா? என்னிடமே நீ டிக்கெட் கேக்குறியா?  என மிரட்டும் தொண்யில் பேசி இருக்கிறார்.

போதைக்கு அடிமையானவர்களை அவர்களுக்கே உரிய பாணியில் சமாளித்த கண்டக்டர், ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார். இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web