“எந்தத் துண்டுக்கும், சீட்டுக்கும் பயந்தவன் அல்ல நான்” - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்!
சட்டப்பேரவையில் முதல்வர் பதிலுரையின்போது வந்த துண்டுச் சீட்டைப் பார்த்தே திமுகவினருக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது முதல்வர் தரப்பிலிருந்து வந்த துண்டுச் சீட்டைப் பார்த்தே எதிர்க்கட்சியினருக்குப் பேசும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக வெளியான தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தான் எந்தவிதமான துண்டுச் சீட்டுகளுக்கும், அழுத்தங்களுக்கும் பயப்படாமல் சட்டமன்ற அவையை எப்போதும் நடுநிலையோடு மட்டுமே நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா தொடர்பான விவரங்கள் குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இதுகுறித்துச் சட்ட விதிகளின்படியே உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
