“நான் அணிந்திருப்பது ஏஐ கண்ணாடி கிடையாது” - அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம்!

 
அமைச்சர் முகமது பர்வேஸ்

சட்டப்பேரவையில் தான் அணிந்திருந்த கண்ணாடி குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு அமைச்சர் முகமது பர்வேஸ் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது அமைச்சர் முகமது பர்வேஸ் அணிந்திருந்த கண்ணாடி, கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு வசதிகள் கொண்ட 'மெட்டா ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்' வகையைச் சேர்ந்தது என்றும், அதன் மூலம் அவர் அவையின் நடவடிக்கைகளை ரகசியமாகப் படம்பிடிக்கிறார் என்றும் தகவல்கள் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ள அமைச்சர் முகமது பர்வேஸ், தான் அணிந்திருப்பது பார்வைக் குறைபாட்டிற்காகப் பயன்படுத்தும் முற்றிலும் சாதாரணமான ஒரு கண்ணாடி மட்டுமே என்று தெளிவுபடுத்தியுள்ளார். அந்த விசேஷக் கண்ணாடியில் கேமராவோ அல்லது செயற்கை நுண்ணறிவு வசதியோ எதுவுமே இல்லை என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.