"நான் தான் விஜய்.." - போதையில் தவெக தொண்டர் அலப்பறை!

 
தவெக தவெக

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி காரணமாக, சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்பு தொண்டர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு வந்த போதை ஆசாமி ஒருவரின் செயலால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றில் நீலாங்கரைக்கு வந்த ஒரு நபர், மது போதையில் தள்ளாடியபடி விஜய் வீட்டின் நுழைவாயில் அருகே நின்று கொண்டு கலாட்டாவில் ஈடுபட்டார். "நான்தான் விஜய், நான் கூட்டணி குறித்துப் பேசுவதற்காக வந்திருக்கிறேன்" என உரத்த குரலில் கத்தியுள்ளார்.

தவெக

தலைவரின் வீட்டின் முன்பே அந்த நபர் செய்த இந்தச் செயலால் அங்கிருந்த மற்ற தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் பேசி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சூழல் கைகலப்பாக மாறும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், அங்கிருந்த மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நிதானமாகச் செயல்பட்டு, அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

tஹ்

ஆட்சி அமைப்பதற்கான முக்கியப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆளுநர் சந்திப்பு என அரசியல் களம் சூடாக இருக்கும் நேரத்தில், தலைவரின் வீட்டின் முன்பே தொண்டர் ஒருவர் இப்படி அநாகரிகமாக நடந்துகொண்டது தவெக-வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.