முதல்வர் ஸ்டாலினின் உறுதி கொண்ட நெஞ்சத்தை பாராட்டுகிறேன் - கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

 
கமல்ஹாசன்
மக்கள் பிரச்னையை நெஞ்சுக்கு நெருக்கமாக அணுகும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனமாரப் பாராட்டுகிறேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் தனது பதிவில், “மக்களின் விருப்பத்துக்கு மாறாக அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையக் கூடாது என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெஞ்சுரத்தோடு எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு பாராட்டத்தக்கது. 

‘நான் முதலமைச்சராக இருக்கும் வரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது’ என்று முதலமைச்சர் சட்டசபையில் பேசியிருப்பது மக்கள் மீதான அவரது  அக்கறையையும் இயற்கை காக்கப்பட வேண்டும் என்பதில் அவருக்கிருக்கும் ஈடுபாட்டையும் தெளிவுபடக் காட்டுகிறது. 

மக்கள் பிரச்சனையை நெஞ்சுக்கு நெருக்கமாக அணுகும் முதலமைச்சர் அவர்களின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனமாரப் பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!