கடன் தொல்லை தாங்க முடியல... கடிதம் எழுதி மனைவி, மகனை கொன்று துணிக்கடை அதிபர் தற்கொலை!

 
jothi jothi

கர்நாடக மாநிலம் மண்டியா டவுன் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். துணிக்கடை நடத்தி வந்த இவருக்கு ஜோதி என்ற மனைவியும், சந்தோஷ் என்ற மகனும் இருந்தனர். இவர்களது மகனுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்து முடிந்து, அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை சந்தோஷின் மனைவி எழுந்து பார்த்தபோது மாமியாரும் கணவரும் படுக்கையில் சடலமாகக் கிடந்தனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழவே, சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் பிரபாகர் தனது துணிக்கடையில் தூக்கில் தொங்குவதைக் கண்டனர். அதிகாலையில் பிரபாகர் தனது மனைவியின் கழுத்தை நெரித்தபோது, அதைத் தடுக்க வந்த மகனையும் சேர்த்து அவர் கொலை செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. அப்போது மற்றொரு அறையில் மருமகள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சம்பவ இடத்தைக் கைப்பற்றிய காவல்துறையினருக்கு பிரபாகர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. துணிக்கடை தொழில் முடங்கியதாலும் கடன் சுமை அதிகரித்ததாலும் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அதில் அவர் எழுதியிருந்தார். தனியார் நிதி நிறுவனங்களின் தொல்லை காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி அவர் இந்தச் செயலைச் செய்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.