பாத்ரூம் கூட போக முடியல.. நெஞ்சை பதற வைக்கும் காசா இளம்பெண் வீடியோ..!!

 
காசா இளம்பெண்

போரால் பாதிக்கப்பட்ட காசா இளம்பெண் வெளியிட்டுள்ள வீடியோ பார்ப்போர்களை கண் கலங்க வைத்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் ராணுவம் இடையே கடந்த 19 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலின் கோர தாக்குதலால், காஸாவின் வடக்கு பகுதியில் இருந்து மக்கள் அனைவரும் தெற்கு பகுதிக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  காஸாவைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஒருவர் பேசிய வீடியோ காண்போரை கலங்கவைத்துள்ளது. அந்த வீடியோவில், “காஸாவின் டல் அவ் ஹவாவில் வசித்து வந்த நாங்கள், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டோம். நல்ல வேளையாக என்னுடைய நாயை காப்பாற்றிவிட்டேன். எங்களது வீடு பறிபோய்விட்டது, அம்மாவின் வேலையும் பறிபோகியுள்ளது.

Video: Gaza Shopping Centre Flattened In Massive Israel Counterattack

வெளியேற்றப்பட்ட நிலையில், அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். இங்கு சாப்பிட உணவு இல்லை, மின்சாரம் இல்லை, கழிப்பறைக்கு கூட செல்ல முடியவில்லை. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை அடுத்ததாக நான் கூட உயிரிழக்கலாம். எப்படியானாலும் இது எங்கள் மண் தான். நதி முதல் கடல் வரை எங்களுடையதுதான். இதை மறந்துவிடக்கூடாது” என்று பேசியுள்ளார்.

From around the web