கல்யாணமாகியும் காதலனை மறக்க முடியல... விரக்தியால் காதல்ஜோடி தற்கொலை!

 
பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

திருமணமாகியும், முன்னாள் காதலனை மறக்க முடியாததால் காதலர்கள் இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அரண்மனைபுதூரை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 26). இவர் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் தேன்மொழி (வயது 23). இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேன்மொழி 2020ல் வேறு ஒருவரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இருவரும் கோவை போத்தனூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் தேன்மொழி தனது காதலன் மணிகண்டனிடம் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 17ம் தேதி தேன்மொழி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர், மணிகண்டனை கோவைக்கு அழைத்து வந்து, அவருடன் பல இடங்களுக்கு சுற்றி வந்தார்.

தற்கொலை

இதையடுத்து இருவரும் சேர்ந்து வாழ முடியாததால் மனமுடைந்த அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று இரவு ரெட்டியார்சத்திரம் அடுத்த பலக்கனூத்து பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு வந்தனர். இருவரும் பாலக்காட்டில் இருந்து வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web