"முதல் மனைவியைக் கொன்னுட்டு நான் ஜெயிலுக்குப் போக முடியாது!" - 2வது மனைவியுடன் வந்து நடிகர் சரவணன் பரபரப்புப் பேட்டி!

 
பருத்திவீரன் சரவணன்

'பருத்திவீரன்' திரைப்படத்தின் 'சித்தப்பு' கதாபாத்திரம் மூலம் உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் சரவணன், தன் மீது அவரது முதல் மனைவி கொடுத்துள்ள கொலை மிரட்டல் புகார் முற்றிலும் பொய்யானது என்று மறுத்துள்ளார். அத்துடன், தனது இரண்டாவது மனைவியுடன் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து விளக்கமளித்துள்ள அவர், பணத்தைப் பறிப்பதற்காகவே தன் மீது திட்டமிட்டுப் பழிசுமத்தப்படுவதாகப் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நடிகர் சரவணன் மீது, அவரது முதல் மனைவி சூர்யாஸ்ரீ மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், வீட்டில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை நடிகர் சரவணன் ஆட்களை வைத்து அகற்றிவிட்டார். இதனால் எனது உயிருக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை. எனக்கோ அல்லது எனது உடைமைகளுக்கோ ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு நடிகர் சரவணன் மட்டுமே முழுப் பொறுப்பு.

சரவ

என்னிடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமலேயே, அவர் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்து ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன் என சூர்யாஸ்ரீ சாடியிருந்தார். முதல் மனைவியின் புகாரைத் தொடர்ந்து மவுலிவாக்கம் போலீசார் விசாரணையைத் தொடங்கிய நிலையில், நடிகர் சரவணன் இன்று மாலை தனது இரண்டாவது மனைவி ஸ்ரீதேவி மற்றும் தனது 9 வயது மகனுடன் மவுலிவாக்கம் காவல் நிலையத்திற்கு நேரில் வந்தார்.

தன் மீது பொய்யான புகார் அளித்த சூர்யாஸ்ரீ மீது பதில் புகார் அளித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்து ஆவேசமாகப் பேசினார். அப்போது, "நான் அவரோடு 12 ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளேன். எனக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைத்ததே எனது முதல் மனைவி சூர்யாஸ்ரீ தான். என்னால் அவரது உயிருக்கு எவ்விதப் பிரச்சினையும், ஆபத்தும் வராது. என்னிடம் இருக்கும் பணத்தைப் பறிப்பது மட்டும் தான் அவரது தற்போதைய ஒரே நோக்கம்.

ட்க்

உண்மையில் அவர்தான் எனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். முதல் மனைவியைக் கொலை செய்து விட்டு நான் ஜெயிலுக்குச் சென்று களி திங்க முடியாது. எனது எஞ்சிய காலத்திலாவது நான் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கடந்த 12 வருடங்களாக அமைதியாக இருந்து விட்டு, இப்போது திடீரென வந்து ஏன் பேச வேண்டும்? முழுக்க முழுக்க பணத்தை அபகரிக்கவே இந்த நாடகம் ஆடுகிறார்" என நடிகர் சரவணன் பரபரப்பாகக் குற்றஞ்சாட்டினார்.