"6 நாள் கூட அமைதியா இருக்க முடியல... கல்யாண வீட்லயும் புலம்புறாங்க!" - திருச்சியில் தி.மு.க-வை விமர்சித்த CM விஜய்!

 
ஸ்டாலின்விஜய் விஜய்ஸ்டாலின் ஸ்டாலின்விஜய் விஜய்ஸ்டாலின்

தமிழக முதலமைச்சராக அரியணை ஏறிய பிறகு, முதன்முறையாகத் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி அறிவிப்பதற்காக இன்று மாலை திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடையில் ஏறி முதல்வர் விஜய் உரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சியான தி.மு.க தவெக அரசு மீது தொடர்ந்து வைக்கும் விமர்சனங்களுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்தார்.

ஸ்டாலின்விஜய்

"நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, புதிய அரசுக்கு அவகாசம் கொடுக்கும் வகையில் '6 மாத காலம் நாங்கள் எவ்வித அரசியல் விமர்சனமும் செய்யாமல் அமைதியாக இருப்போம்' என்று மேடைகளில் சொன்னார்கள். ஆனால், சொன்னபடி அவர்களால் 6 மாதங்கள் அல்ல, 6 நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை" என்று முதல்வர் விஜய் சாடினார்.

TVK Vs DMK விஜய்ஸ்டாலின்

தொடர்ந்து தி.மு.க தலைவர்களின் சமீபத்திய பேச்சுக்களை விமர்சித்த அவர், "அரசியல் மேடைகளில் பேசுவதை விட்டுவிட்டு, தற்போது பொது நிகழ்ச்சிகளிலும், கல்யாண வீடுகளுக்குப் போனால் கூட அங்கே போய் எங்களைப் பற்றித்தான் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்" என்று காரசாரமாகத் தாக்கிப் பேசினார்.