“என் மகளையும் விட்டுவைக்கவில்லை!” - தவெக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு
Jul 27, 2026, 17:10 IST
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தவெக (தமிழக வெற்றி கழகம்) செயலாளர் விஜய் மோகன் மீது இளம்பெண் ஒருவர் முன்வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும், இதுவரை எவ்வித கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற புகார் வலுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் 'சாட்டை' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "வாட்ஸ்அப் முகப்புப் படத்தைப் பார்த்துவிட்டு, 'இது யார்?' என எனது மகளைக் குறித்தும் பாலியல் ரீதியாக அத்துமீறிக் கேள்விகள் எழுப்பினார்." ஆபாசப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு தன்னைத் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் அந்தப் பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
