பலாத்காரத்திற்கு உடன்படவில்லை... 6 வயது மாணவியைக் கொன்று உடலை பள்ளியில் வீசிய தலைமையாசிரியர்!

 
பாலியல்
பாலியல் சீண்டல்களை எதிர்த்ததால் குஜராத் மாநிலத்தில் 6 வயது மாணவியைக் கொன்று, உடலை பள்ளி வளாகத்தில் வீசிய  முதல்வரைப் போலீசார் கைது செய்துள்ளனர். 

குஜராத் மாநிலத்தின் தஹோத் மாவட்டத்தில் ஆறு வயது சிறுமியின் மரணம் தொடர்பான சில வழக்கில் அதிர்ச்சியளிக்கும் தகவல்களை குஜராத் மாநில காவல்துறை வெளியிட்டுள்ளது.

சிங்வாட் தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் கோவிந்த் நாட் ( 55) முதல் வகுப்பு படித்து வந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததை எதிர்த்ததால், அவரை கழுத்தை நெரித்து கொன்றார் என்று போலீசார் தெரிவித்தனர். அதன் பின்னர் கோவிந்த் மாணவியின் உடலை பள்ளி வளாகத்தில் வீசி உள்ளார்.

கழுத்தை நெரித்து கொலை

போலீசார் விசாரணையில், கோவிந்த் நாட் தனது காரில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது, சிறுமியின் தாயார், கோவிந்திடம் தனது மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டபோது, ​​​​அவர் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். பள்ளிக்கு செல்லும் வழியில், முதல்வர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். மாணவி எதிர்த்தபோது, ​​​​அவளது அலறல் சத்தத்தைத் தடுக்க மாணவியின் வாய் மற்றும் மூக்கை மூடியுள்ளார். இதனால் அவர் மயக்கமடைந்தார்" என்று காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ்தீப்சிங் சாலா கூறினார்.

முதலில் எந்த தவறும் செய்யவில்லை என மறுத்த பள்ளியின் முதல்வர் கோவிந்த், சிறுமியை பள்ளி வாசலில் இறக்கிவிட்டு வேலைக்கு சென்று விட்டதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், அவரது தொலைபேசி இருப்பிடங்கள் மற்றும் மாலை பள்ளியை விட்டு வெளியேறிய நேரம் குறித்து போலீசார் அவரிடம் அடுத்தடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, ​​கோவிந்த் நாட் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மேலும் விசாரணையில், கோவிந்த் பள்ளிக்கு வந்து சிறுமியின் சடலத்துடன் தனது காரை நிறுத்தியது தெரிய வந்தது. மாலை 5 மணியளவில் உடலை வெளியே எடுத்து பள்ளி கட்டிடத்தின் பின்புறம் வீசியுள்ளார். அதன் பின்னர் மாணவியின் பள்ளி பை மற்றும் செருப்புகளை வகுப்பறையில் வைத்துள்ளார். 

பள்ளி நேரம் முடிந்து வெகுநேரமாகியும் தன்னுடைய மகள் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, ​​பள்ளி கட்டிடத்தின் பின்புறம் உள்ள வளாகத்தில் மயங்கிய நிலையில் தங்களது மகள் கிடந்ததைக் கண்டபோது விசாரணை தொடங்கியது.

உடனடியாக மாணவியை லிம்கேடா சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவள் ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட பள்ளி அதிபர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு நெருக்கமானவர் என்று காங்கிரஸ் கூறியதையடுத்து, இந்த வழக்கு முன்னுக்கு வந்ததைத் தொடர்ந்து குஜராத் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பாலியல்

முன்னாள் மாநில அமைச்சர் அர்ஜுன்சிங் சவுகானுடன் பள்ளி முதல்வர் அமர்ந்து ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போன்ற சில புகைப்படங்களை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.

"கோவிந்த் நாட் ஒரு அரசியல் பிரமுகர். சமூக ஊடகங்களில் கிடைக்கும் புகைப்படங்களில், நாட் பாஜக தலைவர்களுடன் காணப்படுகிறார். மேலும் ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்" என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பார்த்திவ்ராஜ் கத்வாடியா கூறினார். காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக இதுவரை பதிலளிக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் கல்வி அமைச்சர் குபேர் திண்டோர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி, "இதனால் நான் மிகவும் வேதனைப்படுகிறேன். நாங்கள் இதை மூன்று நாட்களாகப் பின்தொடர்ந்து வருகிறோம். இதைத் தெரிந்து கொள்ள போலீசாரிடம் சொன்னோம். முதல்வர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். மேலும் இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web