”அமாவாசை சரியா தெரியல..” துணிகளுக்கு தீ வைத்த கிராம பெண்கள்..!

 
துணிகளுக்கு தீ வைத்த மக்கள்
அமாவாசை சரியாக தெரியாததால் ஆண்களின் சட்டை தீயிட்டு கொளுத்தி திருஷ்டி கழித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் சுமார் 300- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் இந்த முறை புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை சரியாக தெரியவில்லை. நேரத்தில் பிறக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

மாசி அமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாட்டு பலன்கள் !!

இதனால் ஒவ்வொரு விட்டிலும் உள்ள ஆண் குழந்தைக்கு நோய் நொடி ஏற்படும் என்றும் தெரிவித்தனர். மேலும் ஆண்கள் சட்டையை தியிட்டு கொளுத்தினால் கிருஷ்டி கழிந்து விடும் என்று வதந்தியை பரப்பி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆண் குழந்தைகள் அணிந்திருந்த துணிகளை வீட்டின் வாசல் முன்பு போட்டு நள்ளிரவில் தீயிட்டு கொளுத்தினர்.

அமாவாசை சரியாக தெரியாததால் தீங்கு என வதந்தி: ஆண் குழந்தைகள் துணிகளை எரித்து திருஷ்டி கழித்த பெண்கள்

ஒருவரை பார்த்து ஒருவர் என பல வீடுகளில் ஆண் குழந்தைகளின் துணிகள் எரிக்கப்பட்டன. மகாளய அமாவாசை சரியான நேரத்தில் வராததால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பழைய துணிகளை தியிட்டுக் கொளுத்தி திருஷ்டி கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web