“ஈரானை ஆட்சி செய்வது யார் என்றே தெரியவில்லை” - ட்ரம்ப்
Oct 7, 2026, 16:30 IST
அமெரிக்கா - ஈரான் இடையே தொடர் போர் சூழல் நிலவி வரும் சூழலில், ஈரானின் தற்போதைய அதிகார மையம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஈரானில் தற்போது அரசு நிர்வாகத்தை அல்லது நாட்டை யார் வழிநடத்துகிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் முதன்மை மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாத சூழல் நிலவுவதாலேயே, அந்நாட்டை தற்போது யார் இயக்குகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் விவகாரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது அல்லது அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக அமெரிக்கா விரைவில் இறுதி முடிவை எடுக்கும் என்றும் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
