எனக்கும் விஜய் மேல இந்த சந்தேகம் தான்... பார்த்திபன் பொளேர்!

 
விஜய் பார்த்திபன்


தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கி வெற்றிகரமாக முதல் அரசியல் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகை குறித்த  கேள்விகள் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பார்த்திபனிடம் விஜய்யின் அரசியல் செயல்பாடு  குறித்து கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் பார்த்திபன்  ” என்னைப்பொறுத்தவரையில் நான் எல்லா விஷயங்களையும் பாசிட்டிவாக பார்ப்பேன்.

விஜய் மக்கள் இயக்கம்

நண்பர் விஜய்க்கு அரசியல் வரவேண்டும் என்று அவருக்கு எந்த அவசியமும் இல்லை. சினிமாவில் பெரிய ராஜாங்கமே நடத்திக்கொண்டு இருக்கிறார்.  அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தான். வசூல் மன்னன் அவர் தான். படத்துக்கு ரூ 200 கோடி சம்பளம் வாங்குகிறார். இந்த மாதிரி சிம்மாசனத்தை விட்டுவிட்டு எதற்காக மக்கள் பிரச்சினைக்கு போகவேண்டும்.
அப்படி என்றால் அவர் எதோ நல்லது செய்ய விருப்பப்படுகிறார். எனவே, இப்போதே அவரை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக அவருக்கு வழிவிட்டு  ஆதரவு கொடுக்கவேண்டும். மாறுதல் ஒன்று தான் மாறாதது கடைசி வரை இவுங்க தான் ஆட்சி செய்யவேண்டும் என்றோ இவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்றோ இங்கே  ஒன்றுமில்லை. விஜய் செய்யும் விஷயங்கள் ஏற்கனவே நம்ம நடிகர்கள் செய்து கொஞ்சம் பின் வாங்கிய காரணத்தால் கொஞ்சம் பயம் இருக்கிறது.

இப்போது உதிக்கும் சூரியன் உதய சூரியன்! இயக்குனர் பார்த்திபன் !
அந்த சந்தேகம் எனக்கும் விஜய் மேல இருக்கு. இதெல்லாம் பேசுவார்கள் அதன் பிறகு உறுதியாக நிற்பார்களா இல்லையா என்று அந்த சந்தேகத்தை ஊதி பெருசாக்கி ஒருத்தர் நல்லது செய்ய வருவதை தடுக்காமல் அவரை பயமுறுத்தாமல் இருக்கவேண்டும். அவர் மிகவும் முனைப்போடு அரசியலில் செயல்படட்டும்” எனவும் இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web