“மகாகவியின் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்” ... எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

 
எடப்பாடி பழனிசாமி

இன்று மகாகவி பாரதியாரின் 143வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், முண்டாசு கவிஞரின் பிறந்தநாளான இன்று, மகாகவியின் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன் என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இது குறித்த அவரது பதிவில், ‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. இச்சகத்தில் உள்ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்  அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே’ என்ற வரிகளை உச்சரிக்கும் போதே நமக்குள் ஏற்படும் விடுதலை வேட்கையும், சுயமரியாதை உணர்வும் தான் #பாரதி. 

முண்டாசுக் கவிஞரின் பிறந்தநாளான இன்று, மகாகவியின் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!