“காங்கிரஸ் தலைமையிடம் அப்போவே சொன்னேன்..” - ப. சிதம்பரம்

 
பெட்ரோல், டீசல் விலை கடந்த 19 நாட்களாக ஏன் உயரவில்லை? – ப.சிதம்பரம்

மக்களவையில் 22 இடங்களையும் மாநிலங்களவையில் குறிப்பிடத்தக்க இடங்களையும் கொண்டுள்ள திமுகவைத் தங்கள் பக்கம் வைத்திருக்க வேண்டும் எனக் காங்கிரஸ் தலைமையிடம் முன்பே சுட்டிக்காட்டியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் ப.சிதம்பரம்

மக்களவையில் 22 இடங்களையும் மாநிலங்களவையில் குறிப்பிடத்தக்க பலத்தையும் கொண்ட திமுகவைக் கூட்டணியில் தக்கவைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தைக் காங்கிரஸ் தலைமையிடம் முன்பே எடுத்துரைத்ததாகப் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தது சரியான முடிவாக இருந்தாலும், அதற்குப் பிறகு நடைபெற்ற சில நிகழ்வுகளால் திமுகவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டு குலைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்

அரசியல் மற்றும் கூட்டணி சார்ந்த சில விஷயங்களைக் கட்சிக்குள் மட்டுமே விவாதிக்க முடியும் என்றும், அவற்றை வெளியில் பகிரங்கமாகக் கூற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.