’ரூ.60 லட்சம் கடன் வாங்கி கொடுத்தேன்’.. திருப்பி கேட்டால் மிரட்டல் விடுக்கும் தவெக நிர்வாகி.. கதறும் இளைஞர்!
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, கோட்டகுப்பத்தைச் சேர்ந்த ஆஷிக் அலி (31), தனது உறவினர்களுடன் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதில், நான் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர், தொழில் மற்றும் வீட்டு பராமரிப்பு செலவுகளுக்காக ரூ. 60 லட்சம் தருமாறு என்னிடம் கேட்டார்.

நாங்கள் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்ததால், மார்ச் 2023 இல் என் பெயரில் வங்கிக் கடன் வாங்கி, நம்பிக்கையின் அடிப்படையில் ரூ. 60 லட்சம் கொடுத்தேன். பணத்தைப் பெற்ற பிறகு, கடன் தொகைக்கு மாதத் தவணையாக ரூ. 20 லட்சத்து 29 ஆயிரத்து 732 அனுப்பினார். பின்னர் கடந்த 6 மாதங்களாக கடன் தொகையை முறையாக செலுத்த பணம் அனுப்பாமல் என்னை ஏமாற்றி வருகிறார். எனது நண்பர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கிறார்.
நான் அவரிடம் பணம் கேட்டபோது, தனது குண்டர்களைப் பயன்படுத்தி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனக்கு வர வேண்டிய 46 லட்சம் ரூபாய் தருவதாக முத்திரைத் தாளில் எழுதினார். ஆனால் இன்றுவரை அவர் எனக்கு வர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே, அவர் மீது விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து தவெக நிர்வாகி முகமது கௌஷியிடம் கேட்டபோது, ’அவர் பணத்தை வாங்கி கொடுத்தது உண்மைதான். ஆனால் நான் ஏற்கனவே பாதி பணத்தை கொடுத்துவிட்டேன், மீதியை நான் கொடுப்பேன்’. அதற்குள் என் மீது புகார் அளித்துவிட்டதாக அவர் தொலைபேசியில் விளக்கினார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
