’மது பாட்டில் சின்னம் தான் வேண்டும்’.. கழுத்தில் தாலியுடன் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்!

 
ஆறுமுகம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ்நாடு குடிப்போருக்கான விழிப்புணர்வு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் கழுத்தில் தாலியுடன் வந்து மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பக்தி கூட்டணி, பகுத்தறிவுக் கூட்டணி,  எங்கள் பார் கூட்டணிக்கும் தான் போட்டி நிலகிறது. மத்திய அரசுதான் மது ஆலைக்கு அனுமதி தருகிறது. அதனால்தான் நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன்.

இனிமேல் கடல் நீரில்தான் மது தயாரிக்க வேண்டும். இளம் விதவைகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மதுக்கடைகளில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். மது குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஜீவனாம்சம் மற்றும் காப்பீடு வழங்க வேண்டும். அனைத்து வகையான மதுபாட்டில்களுக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும். எங்களுக்கு சின்னமாக மதுபாட்டில், டம்ளர், செருப்பு என ஏதாவது ஒன்றை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web