வீட்டுக்கு போக ஹெலிகாப்டர் வேணும்... கலெக்டரிடம் மனு அளித்த இளைஞர்!

இந்தியாவில் மாவட்ட கலெக்டர்கள் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் குறை தீர்க்கும் முகாம்களை நடத்தி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த முகாமிற்கு வரும் மக்கள் வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, ஓய்வூதியம், மின் இணைப்பு இவைகளை கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் ஹெலிகாப்டர் வேண்டும் எனக் கலெக்டரிடம் விண்ணப்பித்து இருப்பது அதிகாரிகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி பார்மர் மாவட்ட கலெக்டர் தினா தபி என்பவர் ஜோர்புரா கிராமத்தில் குறை தீர்க்கும் முகாமை நடத்தினார். அப்போது அங்கு வந்த மங்கி லால் என்பவர் கலெக்டரிடம் மனு ஒன்றைக் கொடுத்தார்.அந்த மனுவில் அவர் எனது வீட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து விட்டனர். அந்தப் பாதைகளில் அவர்கள் கடந்த சில நாட்களாக விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் என்னுடைய வீட்டுக்கு செல்லும் பாதை முழுவதுமாக அடைக்கப்பட்டு விட்டது.
எனவே நான் வீட்டிற்கு சென்று வர ஹெலிகாப்டர் ஒன்றை வழங்க வேண்டும் என கேட்டிருந்தார். இதனைக் கண்டு கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். தாசில்தாரை அழைத்து இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி மங்கி லால் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்த தாசில்தார் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் 3 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!