பார்த்த உடன் உல்லாச ஆசை... நம்பி சென்ற இளம்பெண் கொடூர கொலை!
ஈரோடு மாவட்டம் வாய்க்கால்மேடு பகுதியில் இளம்பெண் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த நர்மதா (33) என்ற பெண், மினி பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த போது 17 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் திருநம்பி (பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர்) என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்து பயணத்தின் போது ஏற்பட்ட அறிமுகத்தைத் தொடர்ந்து, இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம், ஒருகட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.

இது குறித்த போலீசாரின் விசாரணையில், அந்த இளைஞரின் பாலின அடையாளம் குறித்து நர்மதாவுக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த 17 வயது திருநம்பி, அருகில் இருந்த கல்லை எடுத்து நர்மதாவின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நர்மதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நர்மதாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய அந்த திருநம்பியைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்கள் மற்றும் பொது இடங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் பழகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும், இத்தகைய ஆத்திரத்தினால் ஏற்படும் விளைவுகளையும் இந்தச் சம்பவம் ஒரு பாடமாக உணர்த்துகிறது.
