உங்களுக்கு தண்டனை தர வெளியே அழைத்துச் செல்ல விரும்புகிறேன்... எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடியின் சர்ப்ரைஸ் விருந்து!
உங்கள் அனைவருக்கும் தண்டனை தருவதற்காக இன்று உங்களை வெளியே அழைத்துச் செல்ல விரும்புகிறேன்’ என்று கூறியபடி எம்.பி.க்களுக்கு இன்று மதியம் பிரதமர் மோடி திடீரென மதிய விருந்தளித்தார்.
மதிய விருந்தின் போது, பிரதமர் மோடி, அவருக்குப் பிடித்த உணவு முதல் கோவிட்-19 நெருக்கடி நிலை, அவரது திடீர் பாகிஸ்தான் பயணம் என கட்சி எல்லைகளைக் கடந்து எம்.பி.க்களுடன் இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கேன்டீனில் மதிய உணவு சாப்பிட்டப்படியே சாதாரணமாக உரையாடினர்.
PM Narendra Modi had lunch with MPs in MP canteen inside house , it was personal interaction with MPs across party lines and PM also discussed on white paper with MPs and other important issues @NKPremachandran @Murugan_MoS @jtnladakh @MpRammohannaidu @sasmitpatra pic.twitter.com/gZaf8bO32d
— Harsha chandwani (@harsha19chand) February 9, 2024
இன்று பிற்பகல் இது குறித்து எட்டு எம்.பி.க்களுக்கு, பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது, பிரதமர் மோடி அவர்களை நாடாளுமன்றத்தில் iன்று சந்திக்க விரும்புவதாகக் கூறி மதிய உணவை சேர்ந்து சாப்பிட அழைக்கப்பட்டார்கள். மதிய விருந்தில் கலந்து கொண்ட எம்.பி.க்களில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பிஜேடி ராஜ்யசபா எம்.பி சஸ்மித் பத்ரா, மூத்த மக்களவை எம்.பி என்.கே.பிரேம சந்திரன், டிடிபி எம்பி ராம் மோகன் நாயுடு, பிஎஸ்பி எம்பி ரித்தேஷ் பாண்டே, பிஜேபியின் லடாக் எம்பி ஜம்யாங் செரிங் நம்க்யால் மற்றும் நாகாலாந்தின் பாஜக எம்.பி., ஃபங்னோன் கொன்யாக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எம்.பி.க்கள் பிரதமர் அலுவலகத்தை அடைந்ததும், சிறிது நேரம் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, எம்.பி.களுடன் இணைந்து அவர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
"இன்று நான் உங்களுக்கு ஒரு தண்டனை தருவதற்காக வெளியே அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ஆர்வமுள்ள எம்.பி.க்கள், நாடாளுமன்ற கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள எம்.பி.க்களுக்கான கேன்டீனுக்கு என்னோடு வாருங்கள்” என்று அழைத்துச் சென்றார்.
விரைவில், எம்.பி.க்கள் பிரதமர் மோடியுடன் மதிய உணவிற்கு அமர்ந்தனர். அரசியல் குறித்து மட்டுமல்லாமல் தனிப்பட்ட இரண்டு மணிநேர உரையாடல்களால் அவர்களது மதிய விருந்து சந்தோஷமான சர்ப்ரைஸ்களுடன் கடந்தது. ஒரு எம்.பி., பிரதமர் மோடியிடம் கேட்ட முதல் கேள்விகளில், 'உங்களுக்குப் பிடித்த உணவு எது' என்று கேட்டதற்கு சிரித்தப்படியே கிச்சடி என்று பதிலளித்தார் மோடி .
பயணம் மற்றும் தாமதமாக வேலை செய்யும் போது கூட, பிரதமர் மோடி தனது நேரத்தை எவ்வாறு சமாளித்தார் மற்றும் வேலை அழுத்தத்தை சமாளித்தார் என்று கேட்டதற்கு, “நான் நீண்ட நேரம் வேலை செய்வது வழக்கம். சில நேரங்களில், நான் ஒரு நாள் முழுவதும் தூங்கவில்லை என்பதை கூட நான் உணர்ந்ததில்லை என்று பதிலளித்தார் பிரதமர். குஜராத் முதலமைச்சராக இருந்த அனுபவம், தற்போது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
2015 ல் பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் மகளின் திருமணத்திற்கு திடீர் பயணம் மேற்கொண்டது குறித்து ஒரு எம்.பி பிரதமரிடம் கேட்ட போது, இந்த திடீர் பயணத்தின் முன்னோட்டத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அன்று பிற்பகல் 2 மணி வரை நாடாளுமன்றத்தில் இருந்ததாகவும், பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு திட்டமிடப்பட்ட பயணத்திற்கு புறப்பட்டதாகவும் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பும் வழியில், பாகிஸ்தானில் நிறுத்த முடிவு செய்ததாகவும், ஆனால் SPG மறுத்து விட்டதாகவும் கூறியவர், இருப்பினும் ஷெரீப்பை அழைத்து, பாகிஸ்தான் பிரதமர் அவரை வரவேற்கத் தயாரா என்று கேட்டதாக தெரிவித்தார். இரு தரப்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தெளிவாகியதும், பிரதமர் மோடி திருமண விழாவில் பங்கேற்றதாக தெரிவித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!