18 வயசு தான் ஆச்சு... உடம்பு முழுக்க காயம்... காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
தற்கொலை இளம்பெண் நர்சிங் மாணவி புதுமணப்பெண் வரதட்சணை தற்கொலை இளம்பெண் நர்சிங் மாணவி புதுமணப்பெண் வரதட்சணை

காதலிச்சவனையே திருமணம் செய்துக் கொண்ட நிலையிலும், நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெற்றோரையும், உறவினர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், உடல் முழுக்க காயங்களுடன், ஜீவலட்சுமி என்கிற நர்சிங் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூலித் தொழிலாளி மகளான ஜீவலட்சுமியும், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி ஜீவலட்சுமி திடீரென நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக அவரது மாமியார் தரப்பில் இருந்து பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ்

தகவலறிந்து பதறியடித்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்ற பெற்றோரும் உறவினர்களும், ஜீவலட்சுமியின் உடலில் பல இடங்களில் காயங்களும், கழுத்தில் தூக்கில் தொங்கியதற்கான தழும்புகளும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து ள்ளனர்.

திருமணமான  சில நாட்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டும், பெற்றோர் வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கி வருமாறும் கணவர் குடும்பத்தினர் ஜீவலட்சுமியைத் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஜீவலட்சுமியை சாதிப் பெயரைச் சொல்லி அடிக்கடி அவமதித்ததுடன், கணவர் ஜீவானந்தம், அவரது தம்பி மற்றும் மாமியார் உட்பட 5 பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டுள்ளதாகப் பெண்ணின் தாயார் தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பள்ளி மானவி தற்கொலை

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவலட்சுமியின் உடலைச் செய்யாறு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே, விசாரணைக்காக வந்த செய்யாறு சப்-கலெக்டர் அம்பிகா ஜெயினின் வாகனத்தை முற்றுகையிட்ட உறவினர்கள், குற்றவாளிகள் 5 பேரையும் உடனடியாகக் கைது செய்யக் கோரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் வரதட்சணை கொடுமை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் உறுதியளித்த பிறகே போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.