'நம்மை விட்டு விலகுகிறாளோ என்று பயந்தேன்’... நயன் தாரா தாயார் உருக்கம்!
நடிகை நயன்தாராவின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மைல்கற்கள், திரைப்படம் மற்றும் வாழ்க்கை இரண்டிலும் அவரது வெற்றிகள் மற்றும் பின்னடைவுகள் உட்பட இந்த ஆவணப்படம் தெளிவான பார்வையில் எடுக்கப்பட்டிருந்தது சிறப்பு. இதில், நயன்தாராவின் வாழ்க்கையில் ஒரு சவாலான கட்டத்தைப் பற்றி, குறிப்பாக நடிகர் சிம்புவுடனான அவரது கடந்தகால காதல் உறவைப் பற்றி நயன்தாராவும், அவரது தாயார் ஓமனா குரியனும் வெளிப்படையாகப் பேசியிருந்தனர்.
ஆவணப்படத்தில், நயனின் தாயார் ஓமனா குரியன் தனது மகளின் காதல் உறவின் போது அவர் சந்தித்த உணர்ச்சிக் கொந்தளிப்பை விவரிக்கிறார். அந்தக் காலகட்டத்தைப் பற்றிக் கூறுகையில், 'எங்களிடம் செட்டிகுளங்கர அம்மா இருக்கிறார். தினமும் காலையில் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்வேன். நானும் இயேசுவிடமும்ம் பிரார்த்தனை செய்தேன். செட்டிகுளங்கர அம்மா என் மகளைத் என்னிடம் திருப்பிக் கொடுத்தாள். அவள் எங்களிடமிருந்து நழுவுகிறாள் என்று நான் நினைத்த நேரங்களும் உண்டு. வலிமைக்காகவும், என் மகள் எங்களிடம் திரும்பவும் வர வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். கடவுள் நம்முடன் இருப்பதால் அவளுக்கு எந்தத் தீங்கும் வராது என்று எனக்குத் தெரியும். அந்தச் சவால்களைச் சமாளிக்கும் தைரியத்தை எங்களுக்கு கடவுள் கொடுத்தார்.'
நயன்தாரா மற்றும் அவரது தாயார் இருவரும் சிம்புவுடனான காதல் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசுவது இதுவே முதல் முறை, இது அவர்களின் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை ஆழமாக்கியது. நயன்தாரா, தான் செய்த தவறுகளையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் ஒப்புக்கொண்டு, உறவு குறித்த தனது கண்ணோட்டத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில், 'எனது தொழிலும் வாழ்க்கையும் முடிந்து விட்டதாக எண்ணிய பலர், எனக்காக யாரையாவது திருமணத்திற்குத் தேடித் தருமாறு என் தாயாரைத் தொடர்ந்து அணுகினர். அந்த நடிகரைக் காதலித்தது நான் செய்த தவறு. எனது திரையுலக வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அவர் பின்னால் இருந்தார். தவறுகள் வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆனால் அந்தக் கட்டம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது மற்றும் இன்று நான் யார் என்பதை வடிவமைத்ததில் அந்தக் காலக்கட்டமும் அனுபவமும் உதவியாக இருந்தது” என்று பேசியிருக்கிறார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!