தவெகவில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பேன்.. ஆதவ் அர்ஜூனா!
கூட்டணி கட்சியான திமுக குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து விமர்சித்து வந்தது தொல்.திருமாவளவனுக்கு சங்கடத்தை உருவாக்கியது. இது குறித்து ஆதவ் அர்ஜூனாவிடம் தனிப்பட்ட முறையில் கூறியும் தொடர்ந்து திமுக குறித்து விமர்சித்தது கூட்டணியிலும் சலசலப்பை உருவாக்கியது.

இந்நிலையில், உதயநிதிக்கு எதிராகவும், திமுகவின் மன்னராட்சிக்கு முடிவு கட்டுவது குறித்தும் ஆதவ் அர்ஜூனா பேசியது பெரும் அதிருப்தியையும், தமிழக அரசியலில் சலசலப்பையும் ஏற்படுத்திய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனாவை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்திருப்பதாக திருமாவளவன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முழுவதுமாக விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா, விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் இணைவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, "உங்களது எதிர்கால திட்டம் என்ன? தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருக்கிறீர்களா?" என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், "எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன். இணைப்பு என்பதை தாண்டி, என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன். தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறேனா, அல்லது வேறு கட்சியில் இணைகிறேனா என்பதை விரைவில் அறிவிக்கிறேன்" என்றார்.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
