"விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவேன்" - வாட்டர் மெலன் திவாகர் பேட்டி!
Oct 22, 2026, 12:15 IST
சமூக வலைதளப் பிரபலமான 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர், முதலமைச்சர் விஜய் அழைத்தால் அரசியலுக்கு வரத் தயார் என மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது தெரிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "முதலமைச்சர் விஜய் அழைத்தால் தான் அரசியலுக்கு வரத் தயார் என்று குறிப்பிட்ட அவர், தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தான் ஹீரோவாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறினார்.

'ஜெயிலர் 3' படம் உருவானால் அதில் 'மூர்த்தி' கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் பழிக்குப் பழி கொலைகளைத் தடுக்க அரசு தீவிரமான மற்றும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
