உங்களுடன் போட்டி போட மாட்டேன்.. நீங்க தான் தலைவர்.. ரஜினியை புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்..!!

 
ரஜினிகாந்த் அமிதாப் பச்சன்
தலைவர் என்றால் நீங்கள் தான் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை புகழ்ந்துள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.

அமிதாப் பச்சுடன் நடிப்பது பற்றி ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “லைக்காவின் தயாரிப்பில், ஞானவேல் இயக்கத்தில், தலைவர் 170 படத்தில், 33 வருடங்களுக்குப் பிறகு எனது வழிகாட்டி, அமிதாப்புடன் மீண்டும் பணியாற்றுகிறேன். எனது இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது," என அமிதாப்புடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டார்.


ரஜினியின் இப்பதிவுக்கு பதிலளித்துள்ள அமிதாப் பச்சன், 'நீங்கள் எப்போதும் என் அன்புக்குரியவர். உங்கள் படத்தின் தலைப்பை பாருங்கள், 'தலைவர் 170'. தலைவர் என்றால் அது நீங்கள்தான். அதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா மக்களே? என்னை உங்களோடு ஒப்பிட இயலாது. உங்களுடன் மீண்டும் பணிபுரிவது எனக்கு மிகப்பெரிய கவுரவம்' என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை பார்த்திராத மிரட்டலான புதிய லுக்கில் நடிகர் ரஜினிகாந்த்..

'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் அவரது 170வது படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் ஆரம்பமானது. பின் தூத்துக்குடி, திருநெல்வேலி
பகுதிகளில் நடைபெற்றது. தற்போது அடுத்த கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.அதில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டு நடித்து வருகிறார். தற்போது ரஜினிகாந்த்தும் அதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தில் அமிதாப் தவிர மஞ்சு வாரியர், ராணா, பஹத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024ம் ஆண்டு வெளியாக உள்ளது.

From around the web