நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்.. இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இன்ஸ்டா காதலன்!!

 
திலீப்குமார்

இளம்பெண்களே உஷார். யாரை நம்பியும் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என எத்தனை விழிப்புணர்வு வாசகங்களும், செய்திகளும் வந்த போதிலும் அதனை அலட்சியப் படுத்தவே செய்கின்றனர். இந்த அலட்சியப்போக்கு பல நேரங்களில் ஆபத்தை விளைவித்து விடுகின்றன.புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரில் வசித்து வருபவர்  19 வயது இளம்பெண். இவர்   கிளப் ஹவுஸ்   டேட்டிங் செயலி மூலமாக சென்னையில் வசித்து வரும் திலிப் குமாருடன் அறிமுகமானார்.

நிர்வாண வீடியோ கால்

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.  இதன் பிறகு இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வலைதளங்கள் மூலம்   இருவரும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர். சில வாரங்கள் முன்னர் இளம்பெண்ணிற்கும், திலீப் குமாருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் திலீப்குமார் விடவில்லை  ''நீ என்னிடம் பேசவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்'' என மிரட்டல் விடுத்துள்ளார். பயந்துபோன அப்பெண் திலீப் குமாரிடம் மீண்டும் பேச்சைத் தொடங்கினார்.

சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் ‘சைபர் தடய ஆய்வகம்’

அப்போது, ''உன்னை தொந்தரவு செய்யக்கூடாது என்றால், நிர்வாணமாக வீடியோ காலில் பேச வேண்டும்'' என கூறியுள்ளார். இதனை நம்பிய  இளம்பெண் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியுள்ளார்.   அந்த வீடியோவை ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்துவிட்டு  காலை கட் செய்ததும் அதனை இளம்பெண்ணிற்கு அனுப்பியுள்ளார்.  ''தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன்  '' என மீண்டும் மிரட்டத் தொடங்கியுள்ளார். இதன் பிறகு  பெற்றோரிடம் நடந்ததை கூறி  அந்த இளம்பெண் இது குறித்து  புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.  இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து  தலைமறைவாக உள்ள திலீப்குமாரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!