"எந்த அழுத்தத்திற்கும் பணியமாட்டேன்" - அமைச்சர் விக்னேஷ்
Sep 3, 2026, 16:55 IST
டாஸ்மாக் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் விக்னேஷ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், "மாற்றம் வரும் வரை மாற்றப்படுவது தொடரும்; எந்த அழுத்தத்திற்கும் பணியமாட்டேன், என்றும் தளபதியின் பாதையில்" என்று குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பல்வேறு புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த அதிரடிப் பதிவு வெளியாகியுள்ளது.
