12 ராசிக்காரர்களும் பிள்ளையாருக்கு எந்தப் பொருளால் அபிஷேகம் செய்தால் இரட்டிப்பு பலன்கள்!

 
விநாயகர் பிள்ளையார் கணபதி அபிஷேகம் திருச்சி மலைக்கோட்டை

விநாயகர் சதுர்த்தி நன்னாளில், அவரவர் ராசிக்குரிய பிரத்யேகப் பொருட்களால் விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிஞ்சுக்கோங்க. 

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் விநாயகருக்கு மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதன் மூலம் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் விநாயகருக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதன் பலனாக அவர்களுக்கு மிகவும் சிறப்பான வாழ்க்கை அமையும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் விநாயகருக்கு எலுமிச்சை சாற்றினால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதனால் வாழ்வில் ஏற்படும் அனைத்து வகையான தடைகளும் நீங்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்கள் விநாயகருக்குப் பச்சரிசி மாவில் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதனால் இல்லத்தில் தனலாபம் எனப்படும் செல்வம் பெருகும்.

பிள்ளையார்  மயில்

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் விநாயகருக்குப் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதனால் நீண்ட காலமாகத் தடைபட்டு வந்த காரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் விநாயகருக்குச் சாத்துக்குடி அல்லது நார்த்தம்பழச் சாற்றால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதன் மூலம் வாழ்வில் உன்னதமான முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் விநாயகருக்குத் தேன் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதனால் வாழ்க்கையில் உள்ள இன்னல்கள் குறைந்து மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் விநாயகருக்கு இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதன் மூலம் மிகவும் இன்பமான மற்றும் நிம்மதியான வாழ்வு அமையும்.

விநாயகர் பிள்ளையார் சதுர்த்தி

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் விநாயகருக்கு மஞ்சள் பொடி அல்லது தேன் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதனால் நாம் நினைத்த காரியங்கள் கைக்கூடும்.

மகரம்: மகர ராசிக்காரர்கள் விநாயகருக்குச் சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதன் பலனாகத் தொடர்ந்து பொருட்சேர்க்கை மற்றும் சேமிப்பு அதிகரிக்கும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் விநாயகருக்குப் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதன் மூலம் வாழ்க்கையில் பல்வேறு நன்மைகள் வந்து சேரும்.

மீனம்: மீன ராசிக்காரர்கள் விநாயகருக்கு மஞ்சள் பொடி மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதனால் மிகவும் சிறப்பான மற்றும் வளமான வாழ்க்கை அமையும்.