‘நான் ஆணையிட்டால்...’ எம்ஜிஆர் பார்மூலாவோடு களமிறங்கும் விஜய்... அனல் பறக்கும் அடுத்த போஸ்டர்!

‘நான் ஆணையிட்டால்...’ என்று தனது கடைசி படத்தில் எம்ஜிஆர் பார்முலாவோடு களத்தில் இறங்குகிறார் நடிகர் விஜய். முழு நேர அரசியல்வாதியாகவே வரும் 2026ம் ஆண்டு தேர்தல் முதல் மாற இருப்பதால் சினிமாவுக்கு இந்த படத்தோடு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.
இந்நிலையில் இன்று 'விஜய் 69’ படத்தின் தலைப்பு ‘ஜன நாயகன்’ என அறிவித்துள்ளது படக்குழு. படத்தின் போஸ்டரை விஜய் வெளியிட்டுள்ள நிலையில், நான் ஆணையிட்டால் என்று தனது ட்விட்டர் பக்கத்திலும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
#JanaNayaganSecondLook pic.twitter.com/zcIj9sEcPU
— Vijay (@actorvijay) January 26, 2025
முழுக்க முழுக்க பொலிட்டிக்கல் மாஸ் ஆக உள்ளது படத்தின் போஸ்டரும் தலைப்பும். ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுனர். இப்படத்துக்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் படப்பிடிப்புகளுக்கு இடையே ரசிகர்களுக்கு மத்தியில் வண்டியின் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபி மிகவும் பிரபலம். அந்தப் புகைப்படப் பாணியில் ‘ஜனநாயகன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளது.
கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராகவும், சத்யா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.
தேர்தல் அரசியலில் ஈடுபடும் முன்பு நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் ‘ஜன நாயகன்’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அதற்கு ஏற்றபடி படத் தலைப்பும், போஸ்டருமே அரசியல் பேசுகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!