தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் துணை முதல்வர் பதவி கூட கிடைத்திருக்கும் - திருநாவுக்கரசர் பேட்டி!

 
திருநாவுக்கரசர்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்திருந்தால் கணிசமான தொகுதிகளுடன் துணை முதல்வர் பதவியும் கிடைத்திருக்கும் என மூத்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ஊடகப் பேட்டியொன்றில் பேசிய திருநாவுக்கரசர், தேர்தல் களத்திற்கு முன்பே தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி இணைந்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான சூழல் உருவாகியிருக்கும் என்று குறிப்பிட்டார். அவ்வாறு கூட்டணி மலர்ந்திருந்தால் குறைந்தது 60 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருப்பதுடன், ஆட்சியில் பங்கு மற்றும் துணை முதல்வர் பதவியும் கிடைத்திருக்க வாய்ப்பிருந்ததாக அவர் தெரிவித்தார்.

திருநாவுக்கரசர்

காங்கிரஸுக்குக் கிடைத்திருக்க வேண்டிய இந்த அருமையான அரசியல் வாய்ப்பு மற்றும் கோரிக்கைகள் கைநழுவிப் போனதற்குச் சில மூத்த தலைவர்களின் தவறான முடிவுகளே முக்கியக் காரணம் என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.