“2020ல் டிரம்ப் அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா- உக்ரைன் போரே நடந்திருக்காது” - புதின் பரபரப்பு!

2022ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கியது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியாவும், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் இருந்து வந்தது. இதுவரை இந்த போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததால், பல்வேறு நாடுகளும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வருகின்றன.
சமீபத்தில் அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற ட்ரம்ப் இந்தப் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.அதில் “இந்த ஆபத்தான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா முன்வர வேண்டும்”என டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்து ரஷ்ய அதிபர் புதின் ” 2020 ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால் 2022ல் உக்ரைனுடன் போரே ஏற்பட்டு இருக்காது.
டிரம்ப் ஒரு புத்திசாலியான நபர், நடைமுறை சார்ந்த நபரும் கூட என கூறியுள்ளார். மேலும் அமெரிக்கா உதவினால் உக்ரைனுடன் நடைபெறும் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையை நடத்த ரஷ்யா முன் வரும் ” எனவும் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!