போஸ்ட் ஆபீஸில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் ரூ.2.5 லட்சம் வரை பெறலாம்!
Updated: Sep 4, 2026, 06:48 IST
மாதந்தோறும் சிறிய தொகையைச் சேமித்து எதிர்காலத்தில் பாதுகாப்பான லாபத்தைப் பெற விரும்பும் பொதுமக்களுக்குத் தபால் அலுவலகத்தின் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் சிறந்த தேர்வாக விளங்குகிறது.

இத்திட்டத்தில் மாதந்தோறும் ரூ.5,000 வீதம் சீராக முதலீடு செய்து வருவதன் மூலம் நீண்ட காலத்தில் மிகப்பெரிய சேமிப்புத் தொகையை உருவாக்க முடியும். தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் ரூ.8.5 லட்சத்திற்கும் அதிகமான மொத்தத் தொகையைப் பெறலாம்.

இதில் வட்டி வருமானமாக மட்டும் ரூ.2.5 லட்சத்திற்கும் அதிகமான தொகை முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் எனத் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை அருகில் உள்ள தபால் அலுவலகத்திற்கு நேரில் சென்று அறிந்து கொள்ளலாம்.
