”Blast-ஆக இருக்கும்னு பார்த்தா Waste-ஆ இருக்கு” - ஸ்டாலின் விமர்சனத்திற்கு தவெக பதிலடி!
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை 'Waste Budget' என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்த நிலையில், அவருக்குத் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பதிலடி கொடுத்துள்ளது.
பட்ஜெட் குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "இன்றைய பட்ஜெட் 'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு 'Waste Waste' எனச் சொல்லும்படிதான் உள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இது திராவிட மாடல் அரசின் திட்டங்களை மறுபதிப்பு செய்துள்ள பட்ஜெட் என்றும், தேர்தல் வாக்குறுதிகளான மகளிர் உரிமைத் தொகை உயர்வு, பயிர்க்கடன் தள்ளுபடி போன்றவை குறித்து எந்த அறிவிப்பும் இதில் இல்லை என்றும் சாடினார்.

மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள தவெக ஐடி விங், "ஆட்சிப் காலம் முடிந்த பிறகு 'வேஸ்ட் வேஸ்ட்' என அறிக்கை வெளியிடுவது வேடிக்கையாக உள்ளது" எனத் தெரிவிடைந்துள்ளது.
"திமுக ஆட்சியில் அமர்ந்த உடனேயே மகளிர் உரிமைத் தொகையைக் கொடுக்காமல், ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்தே அறிவித்ததை ஸ்டாலின் மறந்துவிட்டாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் எதுவும் செய்யாமல் ஆட்சி முடியும் தருவாயில் அவசர அவசரமாக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கியதைச் சுட்டிக்காட்டித் தவெக தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
